கள்ள காதலில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதலர்கள் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!!

237

தென்காசி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தை ஒன்று குளத்தில் சடலமாக கிடந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.

அதாவது, சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்துமாரி. கணவர் சென்னையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் முத்துமாரி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரிக்கும் வல்லராமபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டதால் இவர்கள் இருவருக்கும் 2018-ஆம் ஆண்டு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என எண்ணிய இருவரும் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்து விட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த இருவரும் கடந்த 27-ஆம் தேதி பிடிபட்டனர். சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கொடூர சம்பவங்கள் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் முத்துமாரியும் சசிக்குமாரும் 2018 -ஆம் ஆண்டு ஒரு குழந்தையையும், 2019-ஆம் ஆண்டு ஒரு குழந்தையையும் கொலை செய்த கொடூரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2019-ஆம் ஆண்டு பிறந்து 3 நாட்கள் ஆன நிலையில் உள்ள குழந்தையை முத்துமாரியின் வீட்டின் அருகே புதைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த குழந்தையை புதைத்த இடத்தை காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கண்டெடுத்தனர். புதைத்து 3 ஆண்டுகள் ஆனதால் உடல் மக்கி எலும்பு கூடு மட்டுமே இருந்த நிலையில் அது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பச்சிளங்குழந்தைகள் என்று கூட பாராமல் இரு குழந்தைகளை கள்ளகாதலர்கள் கொலை செய்த கொடூர சம்பவம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.