கழுத்தறுக்கப்பட்ட ஆறு வயது சிறுமி… கதிகலங்க வைக்கும் காரணம்!!

476

டெல்லியில் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போன்று, மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சாவூரில் (Mandsaur) 6 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சவூரில் 6 வயது சிறுமி ஒருவர், இர்பான் கான் என்ற கூலித் தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்டு கிடந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிர்பயா போன்றே சிறுமியும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், மனிதர்களின் பேச்சு சப்தம் கூட சிறுமிக்கு அதிர்ச்சியை தருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.