காகத்திற்கு கேக் விருந்து : பதிலுக்கு காகம் செய்த வினோத செயல்!!

1316

ட்விட்டரில்..

மக்கள் பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். உணவை பறவைகள் கொத்திக்கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு சற்று பசுமையான நினைவலைகளை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் பதிலுக்கு பறவைகள் அரிதாக சில மனதிற்கு இனிய செயல்களையும் செய்வது உண்டு. அத்தகைய ஒரு நிகழ்வை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பயனர் கொலின் லிண்ட்சே என்பவர் தனது ட்விட்டரில், தான் ஒரு கேக்கைப் பகிர்ந்துகொண்டபோது அதற்குப் பதில் காகம்தான் பரிசளித்தது. ‘நான் அதற்கு ஒரு சிறிய கேக்கைப் பகிர்ந்து கொண்டேன். அதற்கு பதிலாக எனக்கு ஒரு பரிசு கொடுத்தது.

ஒரு கல்லை தனது கூரிய அலகால், எடுத்துக்கொண்டு வந்து என் காலடியில் போட்டு நன்றி கூறும் விதம் அது நடந்துகொண்டது என்று கூறியுள்ளார். ‘ட்விட்டரில் இதய சின்னம் மற்றும் காகத்தின் பரிசுக் கல்லைக் கொண்ட காகத்தின் படத்தைப் பகிர்வதன் மூலம் அவர் இந்த வரிகளை எழுதியுள்ளார்.

பலர் அந்த ட்வீட்டை பகிர்ந்து காகத்தின் செயலை கண்டு வியந்துள்ளனர். காகங்கள் நல்ல நண்பர்கள் என்றும், தினமும் உணவளித்தால், நீங்கள் வெளியே சென்று ஆபத்தில் ஏதேனும் சிக்கினால் உங்களைக் காக்க முயற்சிக்கும் என்று லின்ஸ்டெக்கிற்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றனர்.