காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

463

கடலூர்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பி.இ படித்த கார்த்திக் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.

காதல் ஜோடி இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு இடையூறு இல்லை என்று நெருங்கி பழகி செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அழிஞ்சிமங்கலம் கிராம கோவிலில் வைத்து,

குடும்பத்தினருக்கு தெரியாமல் தாலி கட்டி ராஜகுமாரியை கார்த்திக் மனைவியாக்கிக் கொண்டதாகவும், அலைபாயுதே ஸ்டைலில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

படிப்பு முடிந்து இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும், குடும்பத்தினருக்கு தெரியாமல் சில தினங்கள் அங்கேயே தங்கி குடும்பம் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

பெற்றோர் சம்மதம் பெற்று தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறியவர், நீண்ட நாட்களாகியும் வரவில்லை என்று ராஜகுமாரி சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பாக இரு குடும்பத்தாரிடம் பஞ்சாயத்து பேசியதில் விரைவில் கார்த்திக் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி வீட்டிற்குள் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துச்சென்றதாகவும், ஆனால் மாதங்கள் பல கடந்தும் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் கார்த்திக் கழற்றிவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கார்த்திக்கிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து, கார்த்திக் உடன் தான் வாழ்வேன் என்றதோடு வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கூறி ராஜகுமாரி தனது குடும்பத்துடன் சென்று போராட்டம் நடத்தினார்.

தனது ஒரு மகள் சொந்த சாதி இளைஞரை நம்பி வாழ்க்கையை பறிகொடுத்து வீதியின் தவிக்கும் நிலையில், தனது மற்றொரு பெண்ணை அவரது கணவர் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக கண்ணீர் சிந்தி வேதனை தெரிவித்தார் ராஜகுமாரின் தாய்..!

கார்த்திக் குடும்பத்தினரோ, தனது மகன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாகவும், ராஜகுமாரியோடு வாழ சம்மதிக்கவில்லை என்பதால் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் கூறி மறுத்துவிட்டனர்.

காதலுக்கு இங்கே சாதி மட்டும் எதிரியில்லை சாதி ஒன்றாக இருந்தாலும் வசதி வாய்ப்புகள் தான் காதல், திருமணத்தில் முடிவதை நிச்சயம் செய்கின்றது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று