காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

1111

திருவள்ளூர்….

திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி திலகா(37) தனது 15 வயது மகளான உஷா உடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பெரிய பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி உஷா கடந்த 10 ஆம் தேதி வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை. அதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளனுர் ஏரியில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, விரைந்த பாதிரிவேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமியின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்கு சென்று வரும்போது மூக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (19) என்ற இளைஞர் உடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த பிரவீனை பிடித்து விசாரித்ததில் சிறுமி உஷாவை காதலிப்பது போல் நடித்து அவளுக்கு மது ஊற்றி கொடுத்து பலமுறை நெருக்கமாக பழகியதுடன் 17வயதான நண்பனுடன் சேர்ந்து பாலியல் சீண்டல்களும் செய்ததாக காவல்துறையினரின் வாக்குமூலத்தில் பகீர் தகவலை அளித்துள்ளான்.

மேலும் காதலன் பிரவீன் மாணவியை பலமுறை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சீரழித்துள்ளார். இந்த நிலையில் மாணவி உஷா தன்னை திருமணம் செய்து கொள்ள பிரவீனை கட்டாயப்படுத்தியுள்ளார். இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவளை தீர்த்து கட்ட தனது நண்பனான அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்