திருப்பத்தூர்…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரியங்கா தேவி (வயது 16) என்பவருடன் காதல் வயப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை காதல் விவகாரத்தில் பிரியங்கா தேவிக்கும் ரமணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ரமணன் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று புடவையால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதலன் இறந்தது குறித்து இன்று காலை தகவல் அறிந்த பிரியங்கா தேவி வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ரமணனின் உடலையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து ரயில் முன் பாய்ந்து காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.