காதலித்து ஏமாற்றிய மருத்துவர் : இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

594

சேலம்….

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தியில் வசித்து வருபவர் மகான் மகாராஜன். இவர் மேச்சேரியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், மேட்டூர் புது சாம்பள்ளியை சேர்ந்த கௌசல்யா, என்பவர் அங்குள்ள மருத்துவ ரத்த பரிசோதனை மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் மகான் மகாராஜனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் பழகி வந்த நிலையில் கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ள மருத்துவர் மகான் மகாராஜன் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக கூறி,

மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கௌசல்யாகொடுத்த புகாரின் பேரில் ஐந்து பிரிவின் கீழ் மகான் மகாராஜன், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது நீதிமன்ற பிணையில் மகாராஜன் கிளினிக் நடத்தி வருகிறார். இதனிடையே மருத்துவர் மகான் மகாராஜனின் தாயார் பரிமளா காந்தம், தனது மகன் மகராஜன் என்பவரை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தி தொடர்ந்து கௌசல்யா தொல்லை செய்து வருகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது குடும்பத்தை காப்பற்ற வேண்டும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்திருந்தார். இந்தமனு குறித்து தொளசம்பட்டி காவல் நிலையகாவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி, இருதரப்பினரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், கௌசல்யா தனது வீட்டிற்கு செல்லாமல், நேராக மகாராஜன் வீட்டிற்கு சென்று, அவரது கையில் பிளேடால் லேசாக கிழித்து கொண்டு வீட்டின் முன்பு மயக்க நிலையில் படுத்துகொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீசார் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

நல்ல நிலையில் இருந்த அவர், மருத்துவர் ஆலோசனையை அடுத்து, மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்துதொளசம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.