காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

408

குஜராத்…

இளைஞருடன் ஓடிப்போன பழங்குடியின சிறுமிக்கு மொட்டை அடித்து, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

குஜராத்தில் உள்ள பதான் மாவட்டத்தின் ஹரிஜ் என்ற கிராமத்தில், ‘வடி’என்ற பழங்குடியின சமூகத்தினர் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள் .

இந்த சமூக மக்களிடையே அடுத்த சமூகத்தை சேர்ந்த நபர்களை காதலித்தால் ஊருக்குள் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வழக்கம் உள்ளது .இந்நிலையில் இந்த சமூகத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமி, அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்தார்.

இதனால் அவர்களின் காதலுக்கு அந்த ஊரில் கடுமையான எதிர்ப்பு நிலவியது .அதனால் சமீபத்தில் அந்த காதலருடன் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி, அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று தங்கி உள்ளார். அப்போது அந்த சிறுமியை, அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதை கேள்விப்பட்ட அந்த பழங்குடியின மக்கள் அந்த சிறுமியை அங்கிருந்து அழைத்து வந்தனர் .

பிறகு அவரது பெற்றோர், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.இதற்கிடையே சிறுமிக்கு கடுமையான தண்டனை வழங்க வடி சமூகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த10ம் தேதி அந்த சிறுமிக்கு மொட்டை அடித்து, முகத்தில் கறுப்பு சாயம் பூசி, கிராமம் முழுதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.இதை கேள்விப்பட்ட போலீஸ் அந்த கிராமத்திற்குள் வந்து அந்த பெண்ணின் காதலன் உள்பட 22 பேரை கைது செய்தனர் .