காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

305

திருநெல்வேலி…

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவ வீரரான இவர் தனது கிராமத்தில் உள்ள பிரேமா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இரண்டு குடும்பமும் சேர்ந்த பேசி இருவரையும் பிரித்துள்ளனர்.

இதையடுத்து மாரியப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் காதலியை விடுமுறையில் வரும்போது எல்லாம் மாரியப்பன் சந்தித்துள்ளார். இதனால் அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இது பற்றி அறிந்த மாரியப்பனின் மனைவி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காதலி பிரேமாவையும் குழந்தையையும் தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.

பின்னர் குழந்தைக்குக் கடையில் புதுத்துணி எடுத்துவிட்டு பிரேமாவும், மாரியப்பனும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் பிரேமாவை தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதே இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். பின்னர் அடுத்தநாள் இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் போலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர், மாரியப்பன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி பிரேமாவின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் அனுப்பிவைத்தனர். இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிரேமாவுக்கு பிறந்த குழந்தையை போலிஸார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.