காதலில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : காதலனால் நடந்த விபரீதம்!!

518

மதுரை….

மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்த பின்னர், கல்லூரி காதலால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாக கூறி அழுதுள்ளார்.

இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்த போது, விளாச்சேரியை அடுத்த பசுமலை பகுதியைச் சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகனான சிராஜுதீன் என்பவரும் தானும் காதலித்து வந்ததாகவும், அவருடைய தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சென்ற போது அத்துமீறி நடந்துக் கொண்டதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பலமுறை அத்துமீறி நடந்துக் கொண்டதாக புகார் தெர்வித்துள்ளார். தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகிறவர் தானே என்று நம்பி 3 லட்சம் ரூபாய் வரை தான் கொடுத்து உதவியதாக இளம்பெண் குறிப்பிட்டுள்ளார்.

தங்க மோதிரம், ஸ்மார்ட் போன் என்று ஏராளமான  பரிசுகளையும்  சிராஜுதினுக்கு வாங்கிக் கொடுத்த நிலையில் திருமணம் செய்துகொள்ளமாறு கேட்டப்போது திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி கை கழுவி விட்டதாக கூறினார்.

இதனையடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களிடம் கேட்டதற்கு, தன்னை அவமானப் படுத்தி, கேவலமாக பேசி அங்கிருந்து அனுப்பியவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தனது வாழ்க்கை மட்டுமின்றி மற்றுமொரு பெண்ணின் வாழ்க்கையையும் சிராஜுதீன் கெடுத்துவிட்டதாக இளம்பெண் கூறியுள்ளார்.

தனது புகாரை முதலில் விசாரிக்க மறுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பலாத்கார வழக்காக பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால், தற்போது  மாவட்ட ஆட்சியரிடம் தன்னிடம் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்து,

பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய காதலன் சிராஜுதீன் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தனது வீட்டிற்கு தெரிந்தவுடன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் பாட்டி வீட்டில் தங்கி வசித்து வருவதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.