காதலுக்கு செக் வைத்த அக்காவுக்கு தீ வைத்த தங்கை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

288

கேரளா….

பரவூர் பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கொலையை செய்துவிட்டு தப்பியோடிய இறந்த பெண்ணின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பரவூர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்ணிடம் சடலம் கருகிய நிலையில் இருப்பதாக பரவூர் காவல் நிலையத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன பெண் பெயர் விஸ்மயா (25) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிவானந்தன் – ஜிஜி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து (22). சம்பவம் நடந்த அன்று தாய் தந்தை இருவரும் வெளியில் சென்றுவிட்டனர்.

இளைய மகள் ஜித்து மனநலம் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருவதால் அவரது கை, கால்களை கட்டிவிட்டு ஒரு சேரில் அமர வைத்துவிட்டு, மூத்த மகளின் கட்டுப்பாட்டில் சகோதரியை விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர், மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி சடலமாக கிடந்துள்ளார். இளைய மகள் மாயமாகியிருந்தார். மேலும், வீட்டின் பின்வாசல் வழியே ரத்த கரை இருந்ததால், போலீசாருக்கு ஜித்து மீது சந்தேகம் ஏற்பட்டது.

சகோதரியை கொலை செய்துவிட்டு அவர் தப்பி ஓடிருக்கலாம் என்ற கோணத்தில் பரவூர் காவல்துறை லுக்அவுட் நோட்டிஸ் வெளியிட்டது. மேலும், ஜித்து வீட்டை விட்டு வெளியே செல்லும்போது விஸ்மயாவின் செல்போனை எடுத்து சென்றுள்ளார்.

அந்த செல்போன் சிக்னலை வைத்து இறுதியாக காக்கநாட்டிலிருந்து ஜித்துவைக் காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் வெளியில் சென்று விட்டனர்.

அப்போது, ஜித்து அக்காவுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது கை, கால்களை அவிழ்த்துவிடுமாறு விஸ்மயாவிடம் ஜித்து கூறியுள்ளார்.

அதன்படி, கயிற்றை அவிழ்த்த பின்னர், ”உன்னால்தான் எனது காதல் கைகூடாமல் போய்விட்டது” என கூறி விஸ்மயாவிடம் ஜித்து சண்டையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து விஸ்மயாவை ஜித்து குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலில் மண்ணெணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியுள்ளார். ஜித்துவிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஜித்து ஏற்கனவே மனநிலை பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்காவை கொலை செய்துள்ளார். இதனால் வழக்கை கையாளுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.