காதல் ஆசை கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

830

15 வயது சிறுமியை காதல் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டப்படி காவல்துறையினர் கைது செய்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் பகுதியை சேர்ந்த கனி என்னும் இளைஞர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய அவர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

சில நாட்களாகவே சோர்வாக காணப்பட்ட சிறுமியை பார்த்து சந்தேகப்பட்ட அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதன் பின் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலத்காரத்திற்கு உடன்படுத்தப்பட்டு கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது கனி என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த இரு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாகவும் இப் பெண் குழந்தையை மிரட்டி இருக்கிறார் கனி.

இதன் பின் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவாடானை அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆர் எஸ் மங்களத்தை சேர்ந்த கனியை போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர்.