காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

267

ஆவடி….

ஆவடி அருகே பதிவு திருமணம் செய்துகொண்ட இரண்டே நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அன்று சென்னை அடுத்த ஆவடி காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தனது அக்காவின் மரணம் தொடர்பாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரின் விவரம்; நான் பூவிருந்தவல்லி முத்துகுமரன் நகரில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி 8 மாத ஆண் குழுந்தை ஒன்று உள்ளது, எனது அப்பா கடந்த இரண்டரை ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார்.

எனது அம்மா வச்சலா என்னுடன் வசித்து வருகிறார். எனது உடன் பிறந்தவர்கள் 5 அக்கா, அதில் கடைசி அக்கா அனிதா பிஏ வரை படித்து உள்ளார். இதில் எனது நான்கு அக்காவுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது.

கடைசி அக்கா அனிதாவுக்கு இரண்டு வருடமாக மாப்பிளை பார்த்து வந்தோம். இந்நிலையில் கடந்த 6/4/2022 ஆம் தேதி மதியம் எனது கைப்பேசிக்கு எனது அக்கா அனிதா தொடர்பு கொண்டு நான் என்னுடன் வேலை செய்து வரும் உதயா என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறினார். பிறகு நான் மாப்பிள்ளை வீட்டில் உள்ளேன். என்று கூறினார். அதற்கு நான் எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வா பேசிக்கொள்ளலாம் என்று கூறினேன்.

அன்று இரவு நான் மீண்டும் எனது அக்காவும் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வா என்று கூப்பிட்டேன். அதற்கு அவள் மாப்பிள்ளை வீட்டார் என்னை அங்கு அழைத்து வர மறுக்கின்றனர். என்று கூறினார். பிறகு அடுத்த நாள் (7.4.2022 ) தேதி காலை ஆவடி T-6 காவல் நிலையத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, உனது அக்கா அனிதா பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.

விசாரணைக்காக நான் மற்றும் எனது அம்மா மற்றும் 2 அக்கா காவல் நிலையத்துக்கு வந்தோம். விசாரணையில் எனது அக்கா அனிதா அவளுடன் வேலைய செய்யும் உதயா என்பவரை கடந்த 6.04.2022 பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறினார்கள்.

இந்த தகவலை தெரிந்து கொண்டு நாங்கள் வீட்டிற்கு சென்று விட்டோம். 07.4.2022 அன்று இரவு சுமார் 8 மணி அளவில் எனது அக்கா சுமதி அனிதாவை தொடர்பு கொண்டு பேசினார். மறுநாள் காலை அனிதாவை தொடர்பு கொண்ட நிலையில் தொலைபேசியை அனிதா எடுக்கவில்லை.

இதையடுத்து ஏப்ரல் 8 அன்று சுமார் 12 மணிஅளவில் T-6 காவல் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு அனிதா தூக்கிட்டு இறந்ததாக தகவல் அளித்தனர். அனிதா இறந்த காரணமும் அவரை என்ன செய்தனர் என்று தெரியவில்லை. ஆகையால், உதயா, அவர் அம்மா லதா அப்பா குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உதயாவின் வீட்டுக்கு சென்று அனிதாவிடம் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணம் நடந்து இரண்டு நாளே ஆனதால் ஆர். டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.