காரின் பானெட்ல் வைத்து இழுத்து செல்லப்பட்ட நபர்: வாக்குவாதத்தால் இளைஞர் செய்த செயல்!!

383

லாரி டிரைவர்….

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கார் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், அவருடன் சண்டை போட்ட நபரை காரின் பானெட்ல் (bonnet) வைத்து இழுத்து சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்த இளைஞருக்கும், லாரி டிரைவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த அந்த இளைஞர், எதிரே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது காரை வேகமாக இயக்கினார்.

சுதாரித்துக்கொண்ட லாரி டிரைவர், காரின் பானெட்ல் (bonnet) ஏறி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள,

அவரை வேகமாக இழுத்துச் சென்றார்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உத்திரப்பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.