திண்டுக்கல்லில்…
திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று வாகனங்கள் எதுவும் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
காயங்களுடன் மருதுபாண்டி உயிர் தப்பினார். கடந்த 6 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ளன.