காலை பள்ளிக்குச் சென்ற மாணவன்… மாலை வீட்டிற்கு வந்து எடுத்த விபரீத முடிவு : பெற்றோர் காத்திருந்த அதிர்ச்சி!!

241

மதுரை….

மதுரை மாவட்டம், கேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெகதீஸ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவர் ஜெகதீஸ் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த ஜெகதீஸ் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார்.

பின்னர் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது பெற்றோர் பலமுறை தட்டியுள்ளனர். ஆனாலும் மாணவர் கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவனின் பெற்றோர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு விரைந்து வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவனின் தற்கொலை காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.