பீகார்………..
பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை அவரது மகள் வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு முதுகில் சுமந்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.
கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உம்ராவதி என்ற பெண் கணவரை இழந்த நிலையில் தாயுடன் வசித்து வருகிறார்.
அந்த தாய் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாரலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாயை அழைத்து செல்ல உம்ராவதி முடிவு செய்தார்.
ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து ஆட்டோ எதுவும் இல்லாததால் தன் தாயை முதுகில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் தாயை முதுகில் சுமந்தபடி வீடு திரும்புகிறார்.