கிணற்றுக்குள் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

374

கேரளா…

கேரளாவில் அண்மை காலமாக ‘பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை’ என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது.

இந்த நிலையில், திருச்சூர் அருகே மேலும் ஒரு கல்லூரி மாணவி மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதிதான் ஜோதி பிரகாஷ் – ரஜித்தா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சந்த்வனா (19), இளைய மகள் மாளவிகா. இதில் சந்த்வனா கொடுங்களூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வியாழன் அன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சந்த்வனா அவரது வீட்டு கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார்.

அதை கண்ட பக்கத்து வீட்டினர் உடனே சந்த்வனாவின் பெற்றோருக்கும் கட்டூர் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீசார் இரிஞ்சாலக்குடா தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து மாணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முதற்கட்டமாக மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள கட்டூர் போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே விசாரணை துரிதப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.