கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் திடீர் மரணம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

268

சென்னை…

கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியில் உள்ள மாவு அரைக்கும் கடையில் பணியாளராக பவுலினா என்பவர் வேலை பார்த்து வந்தார்.அதே பகுதியில் அண்ணா தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

பவுலினா வழக்கம்போல நேற்று கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.சகபயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பிறகு அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர் விமலா, பவுலினா குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பவுலினாவின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்