கீழடி அகழ்வாய்வுப் பணியில் பழங்காலப் பொருட்கள் கண்டெடுப்பு..!

646

சிவகங்கை………..

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் பழங்காலப் பொருட்கள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அகழ்வாய்வுப் பணியில் பழங்கால மண்பானைகள், பாசி மணிகள் கிடைத்தன. பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய வகை மண் கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய பானை உள்ளிட்டவைகள் முழுமையாகக் கிடைத்தன.

இதுதவிர, உடைந்த நிலையில் ஒரு சிறு கிண்ணம் மற்றும் ஒரு பானையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருவதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தெரிவித்தனர்.