குஜராத்………..
குஜராத் மாநிலம் கெடா KHEDA மாவட்டம் நாதியாட் நகரப் பகுதியில் பெய்த கனமழையால் பாலத்துக்கு அடியில் வெள்ளம் திரண்டது.
இதில் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. பாலத்துக்கு அடியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தால் நகர முடியவில்லை.
ஒருமணி நேரமாக வாகன ஓட்டுனரும் உதவியாளரும் வாகனத்தை நகர்த்த முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளத்திலிருந்து ஆம்புலன்ஸை மீட்டனர்.அந்த ஆம்புலன்சில் அவசர சிகிச்சை நோயாளி யாரும் இல்லை என்பதால் பெரும் விபரீதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது