சென்னை….
சென்னை எம்.கே.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்(44). ஆட்டோ ஓட்டுநரான பிரேம் குமார் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் வீடுதிரும்பிய போது, அதேபகுதியில் பக்கத்துவீட்டில் வசிக்கிகும் தமிழ் (30) என்ற இளைஞர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது “என் மனைவி என்னை விட்டுப்பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்” எனக் கூறி பிரேம் குமாரிடம் சண்டையிட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் சண்டை முற்றி அடிதடியான நிலையில், சண்டையை தடுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
அதோடுவிடாமல் போதையில் பிரேம்குமாரின் காதை கடித்து துப்பியுள்ளார். இதில் பிரேம்குமார் காதில் ஒரு பகுதி துண்டானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக எம்.கே.பி.நகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.