குளித்த விவசாயியின் மனைவியை வீடியோ எடுத்த நபருக்கு கணவனால் அரங்கேறிய வெறிச்செயல்!!

347

கடையநல்லூர்….

கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவராக வேலை பார்த்து வரும் செல்லத்துரையின் மகன் கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை என கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுபோதையில் அணைப்பகுதிக்கு சென்ற செல்லத்துரை அங்கு குளித்துக்கொண்டிருந்த திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி புதியசேகர் மற்றும் அவரது மனைவியை செல்போனில் வீடியோ எடுத்ததோடு,

தனது மகனை குளிக்க அனுமதி அளிக்காத பொதுப்பணித்துறை ஊழியர்கள் உங்களை எப்படி அனுமதித்தார்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கைகலப்பும் ஏற்பட்ட நிலையில், புதியசேகர் தான் வைத்திருந்த அரிவாளால் செல்லத்துரையின் தலையில் வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இருவர் தரப்பிலும் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,

புதியசேகர் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கும், செல்லத்துறை மீது 323 கீழ் வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லத்துறை மருத்துவமனையில் சிகிசச்சை பெற்று வரும் நிலையில், அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.