இந்தியா….
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில் இளைஞருக்கு ஆயுள் வரையில் கடுங்காவல் தண்டனை விதித்து போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 29 வயதான முகமது ஹர்ஷத் என்பவரையே போஸ்கோ நீதிமன்றம் தண்டித்துள்ளது.
காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பள்ளி மாணவி கர்ப்பமடைந்த நிலையில், ரகசியமாக குளியலறையில் பிள்ளை பெற்றெடுத்ததை அடுத்தே குறித்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது மாணவியின் குடும்பம். தற்போது இந்த வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இளைஞர் முகமது ஹர்ஷதுக்கு ஆயுள் வரையில் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது போஸ்கோ நீதிமன்றம்.
மட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்த தொகையுடன் சட்ட சேவைகள் ஆணையம் வாயிலாக ஒரு லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஹர்ஷதுக்கு, இதேப்போன்று மேலும் சில புகார்கள் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளதும், நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.