குளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை… பெற்றோர்களே அவதானம்!

572

சென்னையில் ப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், மனைவி செல்வி இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் இன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள ப்ரிட்ஜ் அருகில் பிரிதீஷ் சென்றுள்ளார்.

அப்போது திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனே பிரதீஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “விளையாடிக் கொண்டிருந்த பிரதீஷ், ப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியை தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.