குழந்தை இல்லாத ஏக்கத்தில்… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

311

சென்னை….

உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.

சில தம்பதிகள் எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை என்ற புரிதலோடு வாழ்க்கையை கழித்தவர்கள் பலர். சொத்த இருந்து என்ன பயன், நமக்கு தத்துப்பிள்ளைகள் மூலம் தங்களது கவலையை போக்கி கொள்வார்கள்.

ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் வாழ்க்கை முழுவதும் வாட்டி வதைக்கும். சென்னையில் ஒரு தம்பதி எடுத்த முடிவு சோகத்தை வரவழைத்துள்ளது.

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை, டாக்டர் ராமமூர்த்தி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 76-வயதான நம்பிராஜன். இவர் பிரபல சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி 75-வயதான பாப்பா. இவர் ஒய்வு ஒய்வு பெற்ற ஆசிரியர். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் குழந்தை இல்லாத ஒரு ஏக்கத்தில் வந்தனர். மேலும், வயது முதிர்வு காரணமாக நம்பிராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரது மனைவி பாப்பாவுக்கு நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி என்பவர் நேற்று மதியம் தொலைபேசியில் நம்பிராஜனை தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் அண்ணனை நேரில் சந்திக்க நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றார்.

கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சுப்பிரமணி தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மடிப்பாக்கம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நம்பிராஜன் உடலை இறக்கினர். பின்னர் நம்பிராஜன் மனைவியை தேடியபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி பாப்பா தூக்கிட்டபடி இருந்ததை கண்ட போலீசார் உடல்களை கைப்பற்றினர்.

பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவனிக்க யாரும் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.