இந்தியா…
இந்தியாவில் குழந்தை பிறந்த 10 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள தாரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப் (26). இவருக்கும் பிரதீபா (22) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரதீபா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தம்பதி இடையே சில காலமாகவே குடும்ப விடயம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பிரதீபாவுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற திலீப் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இருவரின் சடலங்களையும் பொலிசார் கைப்பற்றிய பின்னர் திலீப் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், என் வாழ்க்கையில் விரக்தியடைந்துவிட்டேன், எனக்கு திருமணம் ஆன போதும் பின்னரும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் திருமணம் செய்த பெண் என் குடும்பம் மற்றும் அனைத்தும் நாசமாகிவிடும் என அப்போது எனக்கு தெரியாது.
அவளும், அவள் தாயாரும் என் மீது மிக கேவலமான குற்றச்சாட்டை முன் வைத்ததால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். என் தாயாரிடம் பிரதீபா மிகவும் மோசமாக நடந்து கொண்டார், நான் என் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்கிறேன்.
என் தாயார் மற்றும் சகோதரிகள் வரும் வரை என் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் என மிகுந்த வலியுடன் அந்த கடிதத்தை திலீப் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.