கூலிப்படையை ஏவி பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தாய்: அதிர்ச்சி காரணம்!

668

சொத்து தகராறு காரணமாக ரூ.1 லட்சத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேமலதா சுதர். இவருடை கணவர் சமீபத்தில் மறைந்து விட்டார். இவர்களுக்கு மோஹித் (21) என்ற மகன் உள்ளார். ஆனால் போதைக்கு அடிமையாகிவிட்ட மோஹித் தினமும் அவரது தாயை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக எரிச்சல் அடைந்த பிரேமலதா கோபித்துக்கொண்டு அவரது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரேமலதா செலவுக்கு பணம் இல்லாததால் தன்னிடம் இருந்த நிலத்தை விற்க முடிவு செய்து மகாதேவ் என்பவரை அனுகினார்.ஆனால் நிலத்தை விற்க பிரேமலதா மகன் மோஹித் ஒப்புக்கொள்ளவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா பெற்ற மகனையை தீர்த்துக்கட்ட துணிந்தார் .

இதற்காக அவர் கிராமத்தின் அருகே தாபா நடத்தி வரும் கணபத் சிங் ராஜ்புட் என்பவரிடம் மகனை கொலை செய்ய முன்பனமாக 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.காரியம் முடிந்த பின்னர் மீதி 50 ஆயிரத்தை கொடுப்பதாக பிரேமலதா கூறி உறுதியளித்தார்.இதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மோஹித், கணபத்தின் தாபாவுக்கு வந்தார். அப்போது அவர் கேட்ட உணவில் கணபத் தூக்க மாத்திரையை கலந்தார். இதை சாப்பிட்டவுடன் மோஹித்துக்கு ஒரு பீரும் வழங்கப்பட்டது.

இதையடுத்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அதிக போதையில் இருந்ததால் மோஹித்துடன் கணபத்தின் பணியாளர் அனில் நாயக் என்பவரும் உடன் சென்றார். இவர்களை கணபத் உள்ளிட்டோர் பின்தொடர்ந்தனர்.சிவானா என்ற இடத்தில் வண்டியை நிறுத்திய அனில் நாயக், மோஹித்துக்கு மற்றொரு பீரை கொடுத்து குடிக்கச் சொன்னார். இதனால் போதை தலைக்கேறிய மோஹித் தனது சுயநினைவை இழந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு துணியால் மொஹித் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல் எல்லோரும் தாபாவில் அவரவர் வேலையை செய்ய தொடங்கினர்.சிறிது நேரம் கழித்து மொஹித் சடலத்தை பார்த்து சிலர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மொஹித் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி கொலை குறித்து விசாரிக்க தொடங்கினர்.

ஆனால் இந்த கொலைக்கு துப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த போலீஸாருக்கு அங்கிருந்த டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மிகவும் உதவியாக இருந்தன. இதை வைத்து கணபத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது தாபா கடை கணபத் செய்த கொலையை பொலிஸிடம் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பிரேமலதா, மருமகன் கிஷான் சுதர், கணபத், மகாதேவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அனில் நாயக்கை போலீஸார் தேடி வருகின்றனர். கேவலம் சொத்துக்காக பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.