கேரளாவில்..
கேரளாவில் இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ். இவருக்கும் அனகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரயில் மோதியதில் அனகா உயிரிழந்தார்.
இது குறித்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் உடல் அளவிலும், மனதளவிலும் அனகாவை துன்புறுத்தி வந்ததும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
அதன்படி அனகா கர்ப்பமானதையும், இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததையும் கூட அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் கூறவிடாமல் ஸ்ரீஜீஷ் மற்றும் குடும்பத்தார் தடுத்துள்ளனர்.
மேலும் அனகாவின் குடும்பத்தாரின் செல்போன் நம்பர்கள் அனைத்தையும் ப்ளாக் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து இப்படி துன்புறுத்தியதால் தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
இதையடுத்து அனகாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.