கே.டி ராகவனின் ஆபாச வீடியோ விவகாரம் : வீடியோவை வெளியிட்ட இளம்பெண் மற்றும் மதன் ரவிச்சந்திரனுக்கு நேர்ந்த கதி!!

324

தமிழ்நாடு..

தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் வீடியோ அழைப்பில் பெண்களின் உடையை கழட்டுமாறு கூறி அருவருப்பான செயலில் ஈடுபடும் ஆபாச வீடியோ நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்த ராகவன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் மற்றும் பாஜகவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் அதே கட்சியை சேர்ந்த இளம்பெண்ணான வெண்பா ஆகிய இருவரும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை பாஜகவில் இருந்து நீக்குவதாக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் அறிக்கையில், பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை அந்தித்து கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதே வேளையில் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்களை தெரிவித்த இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.