கள்ளக்குறிச்சி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்வர் வினோத்குமார் (வயது 30) இவரது மனைவி ஆஷா ( வயது26) தம்பதியினருக்கு கயல் ( 1) பெண் உள்ளது.
இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மணலூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தை உடல் நிலை மோசமான நிலையில் 17 தேதி வெள்ளிகிழமை இரவு இறந்துள்ளது.
குழந்தை இறப்பதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் வினோத்குமார் அவரது மனைவி ஆஷாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆஷா தூங்க செல்வதாக கூறி சென்று உள்ளார்.
இதையடுத்து சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் மீண்டும் தொலைபேசியில் ஆஷாவை அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழைப்பை எடுக்காத காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரரான உமாமகேஸ்வரி என்பவரை தொடர்புகொண்டு வினோத்குமார் ஆஷாபோனை எடுக்கவில்லை என்ன ஆச்சு என்று பாருங்கள் என கூறியுள்ளார்.
அந்தப்பெண் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ஆஷாவும் குழந்தையும் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சியடைந்துள்ளார். ஆஷாவும் குழந்தையும் இறந்து கிடந்த சம்பவத்தை வினோத்குமாரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத்குமார் மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆஷாவின் வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது ஆஷாவும் குழந்தையும் இருவரும் இறந்து கிடந்தனர்.
இரு உடல்களையும் மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து உடற்கூறு ஆய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட ஆவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகிறது. இறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேற்படி ஆஷாவின் கணவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார் என்பதால் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்று பல்வேறு கோணங்களில் மணலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 2 ஆண்டுகள் ஆனதால் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மணலூர்பேட்டையில் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் சோகத்தை உள்ளது.