கைச்செலவுக்காக தான் நடிக்க வந்தேன்: பிரபல நடிகை!!

865

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடித்தவர்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரகுல் பிரீத் சிங், எதற்காக சினிமா துறையை தேர்வு செய்தேன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், நான் ஆன்மீக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் ஆன்மிக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

அதுவே ஆன்மீக உணர்வுகளை என் மனதிற்குள் பதித்து இருக்கிறது. எல்லோரும் வாழ்க்கையை திட்டமிட்டு நகர்த்துகிறார்கள்.

நான் எந்த திட்டமும் வைத்துக் கொள்வதில்லை. எனக்கு ஆன்மீக சிந்தனை இருப்பதால் நல்ல விடயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.

நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடிக்க வந்தேன். கேமரா முன்னால் நிற்பது பிடித்ததால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன்.

கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் திட்டமிடுவது தேவை இல்லை. ஆன்மீக எண்ணங்களால் எனக்கு முதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

அறிவில் தெளிவும் வந்து இருக்கிறது.நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏனென்றால் 10 வருடங்களுக்கு பின் திரும்பி பார்க்கும் போது ஒவ்வொரு படமும் முக்கிய படமாக தெரிய வேண்டும்.

சினிமா நிரந்தர தொழில் இல்லை. ரசிகர்கள் விரும்பும் வரை தான் இதில் நீடிக்க முடியும்.

அதனால் நான் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஐதராபாத்தில் உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பித்துள்ளேன் என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.