கொட்டிக் கொடுத்தாலும் அந்த மாதிரி இனி நடிக்க மாட்டேன் : கறார் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

910

ஐஸ்வர்யா ராஜேஷ்…

பொதுவாகவே ஹீரோயின்கள் படங்களில் மிகவும் இளமையாக தோன்ற வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அப்போது தான் அதிகளவில் ரசிகர்கள் தங்களை ரசிப்பார்கள் என நினைக்கிறார்கள்.

அது மட்டுமின்றி வயதான தோற்றத்திலோ, குழந்தைக்கு அம்மாவாகவோ நடித்தால் மார்க்கெட் குறைந்து விடுமோ என எண்ணி அதுபோன்ற வேடங்களை தவிர்த்து விடுகிறார்கள்.

ஆனால் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே சற்றும் யோசிக்காமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து கெத்து காட்டியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தான் இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் வென்றது.

இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதன்படி இனிமேல் சாதாரணமாக ஹீரோவுடன் சேர்ந்து டூயட் பாடும் படங்களில் நடிக்க மாட்டாராம். மேலும் நடித்தால் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் கதையாக இருக்க வேண்டுமாம் அப்படி இல்லை என்றால், கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இருக்க வேண்டுமாம்.

இதுமட்டுமல்ல இனிமேல் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற படங்களில் நடித்துள்ளது போல் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க மாட்டாராம். இந்த முடிவுகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் உறுதியாக உள்ளாராம். இதன் காரணமாக ராணாவுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை அணுகியுள்ளனர்.

ஆனால் கதைப்படி அந்த பெண் கதாபாத்திரம் சில காட்சிகள் மட்டுமே வருவதோடு கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இல்லையாம். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என கூறி ஐஸ்வர்யா மறுத்து விட்டாராம்.

நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்திருக்குற இந்த முடிவ பார்த்தா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவ பாலோ பண்ற மாதிரி தெரியுதே. ஒருவேளை அவங்கள மாதிரியே அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக முயற்சி பண்ணிட்டு இருக்காங்களோ?