கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் : உடல் அடக்கத்துக்கு பின் கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

259

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்த பிறகு இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என குறுச்செய்தி வந்தது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (35). இவருடைய மனைவி உமா (33). இந்நிலையில், உமாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் உமா கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர் சென்னை மாகராட்சி பணியாளர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சென்னை மாநகராட்சி சார்பில் உமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உமாவின் செல்போனுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுடைய மாதிரியை கோவிட் 19 பரிசோதனை செய்ததில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக குறுச்செய்தி வந்தை கண்ட கணவர் பரமேஷ்வரன் அ.திர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பரமேஷ்வரன் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது தவறுதலாக குறுஞ்செய்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழப்பமடைந்த அவர் தன் மனைவி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தான் இ.றந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துமனை இரண்டும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.