கொரோனாவால் இறந்த 300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்தவரின் பரிதாப நிலை! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

493

ஹரியானா……..

ஹரியானாவில் கொரோனாவால் மாநகராட்சி அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதன் நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் சு.டு.கா.டுகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அரியானா மாநிலம் ஹிசார் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவின் தலைவராக மாநகராட்சி அதிகாரி பிரவீன் குமார் என்பவர் செயல்பட்டு வந்தார்.

அவர் கடந்தாண்டு முதல் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்திருந்தார். இரு தினங்களுக்கு முன்பு உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்குமார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா வழிகாட்டுதலின்படி ரிஷி நகரில் உள்ள தகன மைதானத்தில் அவரது இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது