கொரோனாவால்..
கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றபோது, அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி மோசமாக நடந்து கொண்டனர். பின் அவரது உடல், வேறொரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் கணவரின் இறுதி ஆசை. அதன்படி அவரது உடலை எங்கள் முறைப்படி கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும். நான் என் இரு பிள்ளைகளுடன் விதவையாக நிக்கிறேன், எனக்கு இந்த உதவி மட்டும் செய்யுங்கள்”. என்று கண்ணீருடன் கேட்டுள்ளார்.
முன்னதாக மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்ததால், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள், மற்றும் பணியாளர்கள் மீது வ ன்முறை நடத்தப்பட்டது. இதனால், தமிழக மருத்துவர்கள் சங்கம், காவல் துறை மற்றும் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், 20பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், மருத்துவரின் மனைவி இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.