கோடிக்கணக்கில் பணம் தேடி வந்தும் அதை உதறி தள்ளி நேர்மையாக நடந்து கொண்ட ஏழைப்பெண்!!

266

ஸ்மிஜா மோகன்…

கடனுக்கு வாங்கிய லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்த நிலையில் அதை அதிர்ஷ்டசாலியிடம் நேர்மையாக கொடுத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. கேரளாவில் ஸ்மிஜா மோகன் என்பவர் லொட்டரி சீட்டு விற்று வருகிறார்.

இவரின் மூத்த மகனுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறான். இரண்டு வயது இளையமகனுக்கு பு.ற்.றுநோய் பா.தி.த்துள்ளது. இதற்கான , சி.கிச்சைக்கு பல லட்ச ரூபாய் ஸ்மிதாவுக்கு தேவைப்படுகிறது.

இவரிடத்தில் சந்திரன் என்பவர் கடனுக்கு லொட்டரி டிக்கெட் வாங்குவது வாடிக்கையாக இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு கேரள மாநில கோடை கால பம்பர் பரிசுக்கான லொட்டரி டிக்கெட்டை ஸ்மிஜாவிடத்தில் போன் வழியாக சந்திரன் புக் செய்துள்ளார்.

குறிப்பிட்ட எண்ணை போனிலேயே ஸ்மிஜா தெரிவிக்க எஸ்.டி 316142 என்ற எண்ணுடைய லொட்டரி டிக்கெட்டை சந்திரன் தேர்வு செய்துள்ளார். ஆனால், அந்த டிக்கெட் ஸ்மிஜா வசமே இருந்தது. இந்த நிலையில், ஸ்மிஜா சந்திரனுக்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்டுக்கு கேரள கோடைகால லொட்டரியில் முதல் பரிசான ரூ. 6 கோடி விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக சந்திரனை நேரில் அழைத்த ஸ்மிஜா, தன் வசமிருந்த டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்தார். கடனுக்காக வாங்கிய டிக்கெட்டாக இருந்தாலும், துளி பணத்துக்கு கூட ஆசைப்படாமல் தன்னிடத்தில் டிக்கெட்டை கொடுத்த ஸ்மிஜாவுக்கு கண்ணீருடன் சந்திரன் நன்றி தெரிவித்தார்.

டிக்கெட் விலை 200 ரூபாயையும் உடனே கொடுத்தார். தன் வாழ்க்கையில் இவ்வளவு பணக்கஷ்டம் இருந்த போதிலும் ஸ்மிஜா நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்.