கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : பறந்து சென்ற கோழிகளை பிடிக்க அலை மோ.தி.ய மக்கள்!!

506

கோழி……….

கறிக்கோழி ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பறந்த சென்ற கோழிகளை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சமீபத்தில் பாக்கராபேட்டை மலைப்பாதையில் கறிக்கோழி ஏற்றி சென்ற லாரி, கார் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கார் டிரைவர் பார்த்தசாரதி, அதில் பயணித்த பெண் பாரதி ஆகியோர் மரணம் அடைந்தனர்.

காரில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் படுகாயமடைந்த இரண்டு பேரையும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய கறிக்கோழி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விழுந்து அதிலிருந்து கறிக்கோழிகள் ஓட்டம் பிடித்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆகியோர் விபத்தில் சிக்கி கவிழ்ந்து விழுந்த லாரியிலிருந்து ஓட்டம் பிடித்த கோழிகளை பிடித்து சென்றனர்.