கோவிலில் பெண்ணுடன் தனியறையில் இருந்த பூசாரி… செருப்பால் அடித்து விரட்டிய பொதுமக்கள் – வைரல் வீடியோ!!

332

ராஜஸ்தான்..

கோவிலில் பெண் உடன் பூசாரி ஒருவர் தனிமையில் இருந்ததாக கூறி பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து அ.டி.த்து வி.ரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்கராரில் உள்ள சர்னேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூசாரியாக இருப்பவர் பெண் ஒருவருடன் தனியறையில் இருந்துள்ளார்.

இதை பார்த்த ஊர்மக்கள் இருவரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்து சராமாரியாக தாக்கி உள்ளனர். பூசாரி உடன் இருந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தும் அவரை கீழே தள்ளியும் தாக்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணைய்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் கோயலிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய நற்பெயரை கலங்கப்படுத்தவே என்னை தாக்கியும், ஆடையை கிழித்தும் அவமானப்படுத்தி உள்ளார்கள். பூசாரி குடும்பத்தினருடன் நாங்கள் நல்ல உறவை வைத்திருக்கிறோம். சம்பவத்தன்று கோவிலில் நாங்கள் பூசாரி மனைவி வருவதற்காக தான் காத்திருந்தோம்.

ஆனால் சிலர் எங்களை தவறாக புரிந்து கொண்டு எங்களை தாக்கி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். எனது கணவர் சமூகத்தில் உயர்ந்த வேலையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 பேரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டி உள்ளார்.

கோவிலுக்குள்தகாத முறையில் எந்த தவறும் நடந்து கொள்ளாத எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வந்து காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.