கோவையில் முதன்முறையாக தங்க காசு தரும் ஏடிஎம் அறிமுகம்!!

532

கோவை………..

கோவையில் முதன்முறையாக A T M மூலம் தங்ககாசு விநியோகிக்கும் புதிய விற்பனைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக கிராஸ்கட் ரோடு – சிங்கப்பூர் பிளாசா வில் உள்ள மென்ஸ் அவென்யூவில் தங்கக் காசு A TM -ஐ கோவை – ஃபுள் மூன் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் நிறுவியுள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த ATM – ல் ரொக்கம் மற்றும் யுபிஐ , கூகுள் பே ,போன் பே, பீம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பி.எஸ்.916 தரச் சான்றிதழுடன் தங்க காசுகளை பெற முடியும் .

இதில் இடம் பெற்றுள்ள கியூ ஆர் கோட் மூலம் விற்பனையாளர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல, கோவை மாநகரில் மேலும் 10 இடங்களில் தங்கக் காசு A T M எந்திரங்களை நிறுவவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.