கௌரவ கொலை: மகளை கொன்று வீட்டிலேயே புதைத்த தந்தை!!

863

இந்தியாவில் 19 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் தந்தையால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் மசூத், இவரது மகள் சாகிரா(வயது 19), இவருக்கும் எதிர் வீட்டில் வசித்த முனாசிப்(வயது 24) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இந்த விவகாரம் தெரியவந்ததும், இரு வீட்டிலும் எதிர்ப்புகள் எழுந்தன, இரு குடும்பத்தாரும் தூங்கிய பின்னர், முனாசிப்பும், சாகிராவும் போனில் பேசிக் கொள்வது வழக்கம்.

இதேபோல் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போது, சாகிராவின் தந்தை பார்த்து கண்டித்ததுடன் தனி அறையில் அடைத்துவிட்டார்.இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைத்த நிலையில், முனாசிப்பை சந்திப்பதற்காக சாகிரா சென்றுள்ளார்.

அப்போது கிராமத்துக்கு வெளியே தந்தையிடம் மாட்டிக் கொள்ள, வீட்டுக்கு அழைத்து வந்தவர், கட்டுமான வேலை நடந்து வரும் பகுதியில் கொன்று புதைத்துள்ளார்.

சாகிராவை காணவில்லை என உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழ பொலிசில் புகார் அளித்தனர், அதிகாரிகள் வந்து விசாரணை செய்ததில் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைதொடர்ந்து சாகிராவின் உடலை தோண்டியெடுத்த பொலிஸ் அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சாகிராவின் தந்தை, தாய் மற்றும் சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.