கரூரில்………
கரூரில் தினசரி சந்தைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடி நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதால், கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனோ தொற்று 2 வது அலையில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வசதியாக காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினசரி சந்தைகளான காமராஜ் மார்கெட், உழவர் சந்தை, உழவர் சந்தையின் முன்பகுதி, பேருந்து நிலையத்தில் பின்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு காய்கறிகளை நேற்று வாங்கிச் சென்றனர். இதனால் சமூக இடைவெளியே பின்பற்றப்படாத நிலை இருந்தது.
இதனால் மாவட்ட நிர்வாகம் உழவர் சந்தை வெளிப்புற பகுதி, பேருந்து நிலையத்தில் பின்புறம் செயல்பட்ட தரைக்கடைகள் அனைத்தும் பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையத்தில் தினசரி சந்தை அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
இருந்த போதியிலும் சரியான தகவல் பொதுமக்களுக்கு சென்றடையாததால் பொதுமக்கள் காமராஜ் மார்கெட் பகுதியில் திரண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலைய சந்தையில் பொதுமக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது.