சம்பளம் தராமல் மி.ர.ட்டியே நடிக்க வைக்கப்பட்ட நடிகை : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

587

நேஹா சக்சேனா….

மலையாளத்தில் மம்முட்டியுடன் கசபா மற்றும் மோகன்லாலுடன் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. மலையாள இ.ய.க்.குனர் ஒருவர் இயக்கும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி, உரிய சம்பளம் கொடுக்கப்படாமல், இ.ய.க்.குனரால் மி.ர.ட்டப்பட்டே படம் முழுதும் நடித்த திகில் நிகழ்வுகளையும், போலீசார் மூலம் பின்னர் அதற்கு தீர்வு கிடைத்ததையும் தற்போது ஒரு பேட்டியில் கூறி அதிரவைத்துள்ளார். படத்தின் பெயரையோ, இ.ய.க்.குனரின் பெயரையோ குறிப்பிடாமல் அவர் இந்த சம்பவத்தை விவரித்துள்ளார் நேஹா சக்சேனா.

மலையாள இ.ய.க்.குனர் ஒருவர் தனது மகனை ஹீரோவாக வைத்து எடுத்த தமிழ்ப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க நேஹா சக்சேனாவை அணுகியுள்ளார். புதியவர்கள் படம் என்பதால் பெரிய நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை என்றும் நேஹா நடித்தால் உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் வைத்த இ.ய.க்குனர், படத்தில் அவருக்கு ஜோடியாக பிரகாஷ் ராஜ் அல்லது நாசர் நடிக்க உள்ளார்கள் என கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தால் படம் துவங்க தாமதமாகி, சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் முதல் நாளில் இருந்தே படப்பிடிப்பில் மோசமான அனுபவங்கள் ஏற்பட ஆரம்பித்தனவாம். நாசரோ, பிரகாஷ்ராஜோ யாருமே நடிக்கவில்லை என்றும் அப்போதுதான் நேஹாவுக்கு தெரிய வந்துள்ளது. தவிர தேவையே இல்லாமல் சில கவர்ச்சியான நெருக்கமான காட்சிகளை படமாக்க முயன்றுள்ளார் இ.ய.க்குனர். மேலும் இ.ய.க்.குனரின் மகனும் படப்பிடிப்பு தளத்தில் சில விரும்பத்தாகத செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதை இ.ய.க்.குனரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

அதனால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு, தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக நேஹா கூறியதும், இ.ய.க்.குனர் படத்திற்காக செய்த செலவுகள் அனைத்தும் வீணாகி விடும் என கெஞ்சியுள்ளார். வேறுவழியின்றி நடிக்க ஆரம்பித்த நேஹாவுக்கு மீண்டும் சில தொந்தரவுகள் ஏற்பட்டது. ஆனால் இந்தமுறை இ.ய.க்.குனர் நேஹாவிடம், படத்தின் தயாரிப்பாளர் பெரிய தாதா என்றும் இப்படி படத்திலிருந்து விலகினால் அவரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறி அவரை வெளியேற விடாமல் செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முதலாளி அவரை ஒருநாள் இரவு தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியது தான்.. நேஹா மம்முட்டியுடன் நடித்த கசபா படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், நிஜத்திலும் அதேபோலத்தான் இருப்பார் என எண்ணிக்கொண்டு அப்படி அணுகினாராம். அவரை திட்டி அனுப்பிய நேஹா, இதையும் இ.ய.க்.குனரிடம் முறையிட, அவரோ இதை பெரிதுபடுத்த வேண்டாம், இன்னும் பத்து நாட்கள் இந்த ஹோட்டலில் தங்கித்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என மி.ர.ட்டலாக கூறினாராம்.

அதேசமயம் இடையில் தனது பாடிகார்டுகள் சூழ தயாரிப்பாளர் வந்தபோது, அவர் மூலமாக எந்த டார்ச்சரும் இல்லையென்றாலும், இ.ய.க்குனரின் அடாவடியையும் ஹோட்டல் முதலாளியின் அநாகரிக செயலையும் அவரிடம் கூறியும் கூட அவரும் அதை கண்டுகொள்ளவில்லையாம்.. படப்பிடிப்பின் கடைசி நாளன்று மீதி சம்பளத்தை கேட்டபோது, பத்து நாட்கள் கழித்து தான் தரமுடியும், அதுவும் பேசிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்றும் கூற அதிர்ந்து போனாராம் நேஹா சக்சேனா.

ஒருவழியாக படப்பிடிப்பை முடித்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என வெளியேறிய நேஹா சக்சேனா, அதன்பின் கேரளா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் ஆரம்பத்தில் இ.ய.க்.குனர், ஹோட்டல் முதலாளி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் தங்கள் செயலை மறுத்தாலும், நேஹா வைத்திருந்த சிசிடிவி வீடியோ கிளிப்பிங்குகள் ஆதாரமாக இருந்ததால், அதன்பின் அவர்கள் தங்களது செயலை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நேஹாவிற்கு பேசப்பட்ட சம்பளத்தையும் வாங்கி தந்துள்ளனர் போலீஸார். தான் இதுவரை நடித்த படங்களிலேயே மிக கசப்பான அனுபவம் இந்தப்படத்தில் தான் ஏற்பட்டது என்றும், மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்களை வெளியில் கூறியுள்ளேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் நேஹா சக்சேனா.