சர்ச்சை நடிகை அமலா பாலின் கண்ணீர் பக்கங்கள்! 2 வருடங்களில் உடைந்து நொருங்கிய காதல் திருமணம்!!

763

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.

எல்லா வாழ்விலும் சோகமான பக்கங்கள் இருப்பது போலவே.. இவரின் வாழ்விலும் கசந்து போன பக்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது.‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார்.

2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த வருடம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.

அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து அமலாபால், என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பல சோகங்களை கொண்டிருந்தாலும், சர்ச்சைகளை கடந்து நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவரின் புகைப்பட தொகுப்பு இதோ…