சாதனைத் தமிழனை வியந்து பாராட்டிய ஜாம்பவான் சங்ககார!!

957

 

தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தை விமான நிலையத்தில் சந்தித்த குமார் சங்ககாரா அவரை சந்தித்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2014 மற்றும் 2018-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரவை விமான நிலையத்தில் சந்தித்த சதீஷ் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது, சமூக வலைதளங்கள் மூலம் என்னை உங்களுக்கு தெரியும் என நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பதிவிட்டுள்ளார்.

சதீஷின் பதிவுக்கு மறுபதிவிட்ட சங்ககார, உங்கள் வியக்கத்தக்க சாதனைகளுக்கு பாராட்டுக்கள், உங்களின் மிக சிறந்த சாதனைகள் இனி தான் வெளிப்படும் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.