ஜப்பானில் தொடர்ந்து 3-வது இளவரசியும் சாதாரண குடிமகனை மணக்க இருப்பதால் அரச குடும்பத்தினரிடையே கடும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய இளவரசி Ayako எதிர்வரும் அக்டோபர் மாதம் சாதாரண குடிமகன் ஒருவரை அரச குடும்பத்தினரின் சம்மதத்துடன் மணக்க இருக்கிறார்.ஆனால் ஜப்பானிய அரச குடும்ப மரபுகளின்படி இளவரசி பட்டத்தை துறந்த பின்னரே சாதாரண குடிமகனை அவர் மணந்துகொள்ள முடியும்.
இருப்பினும் சுமார் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு ஊக்கத்தொகையாக அவர் தொடர்ந்து பெற்று வருவார்.ஜப்பானிய அரச குடும்பத்தில் இருந்து இளவரசி பட்டத்தை துறந்து சாதாரண குடிமகனை மணக்கும் பொருட்டு வெளியேறுவது இது மூன்றாவது நபராகும்.
இதற்கு முன்னர் இளவரசி Mako மற்றும் இளவரசி Noriko ஆகியோர் உரிய அனுமதியுடன் பிரிந்து சென்று சாதாரண குடிமக்களை மணந்துள்ளனர்.இளவரசி Ayako திருமணம் தொடர்பாக அரச குடும்பத்தைவிட்டு வெளியேறுவதால் ஜப்பானிய அரச குடும்பத்தில் இனி 17 உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் சாதாரண குடிமகனை மணப்பதால் ஜப்பானிய அரச குடும்பத்து பெண்கள் மட்டுமே இளவரசி பட்டத்தை துறக்க நேரிடும், இச்சட்டம் அரச குடும்பத்து ஆண்களுக்கு பொருந்தாது.இதனிடையே தொடர்ந்து 3-வது இளவரசியும் அரச குடும்பத்தை விட்டு பிரிவதால் ஜப்பானிய அரச குடும்பம் கடும் சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.