சாலையில் இறந்து கிடந்த பிச்சைக்காரியிடம் மில்லியன் கணக்கில் பணம்: அதிர்ந்த பொலிசார்!

1039

நாட்டில் சாலையில் பிச்சையெடுத்து வந்த பெண்மணியிடம் மில்லியன் கணக்கில் பணம் இருந்ததை பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Fatima Othman (52) என்ற பெண்மணி Beirut நகரில் அமர்ந்து சாலைகளில் பிச்சையெடுத்து வந்துள்ளார். Lebanese உள்நாட்டு போரில் இவர் தனது கால் மற்றும் கைகளை இழந்ததால், பிச்சையெடுக்க ஆரம்பித்துள்ளார்,

இந்நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் இறந்து கிடந்துள்ளார். இவரிடம் இருந்த இரண்டு பைகளில் பணம் மற்றும் 3,300 டொலர் வங்கி குறிப்புகள் மேலும் 1.1 மில்லியன் டொலர்கள் சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன,

இதனைப்பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர், தற்போது இவரது உடலை, வடக்கு லெபனாலில் வசித்து வந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் இவரது பணத்தினை என்ன செய்யப்போகிர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.