சாலையோரம் நின்ற லாரி மீது கட்டுப்பாட்டை இ.ழ.ந்த கார் மோதி விபத்து!!

455

ஆந்திர…….

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெத்தவலசாவில் இருந்து ராஜமகேந்திரவரத்திற்கு வர்மா என்பவர் தனது குடும்பத்தினருடன் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்வதற்காக காரில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தார்.

பெத்தாபுரம் அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்.