சாவிலும் பிரியாத இளம் காதல் ஜோடி : மனதை உறைய வைக்கும் சம்பவம்!!

576

இளம் ஜோடி..

காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து.

கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த ஜோடி உயிரிழந்தனர். சம்பவத்தில் வல்லவ விதானகே ரிசித குமார (24), களுதுருகே லக்ஷானி (19) ஆகியோரே உயிரிழந்தனர். காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களின் முன்னர் அவர்கள் திருமணம் முடித்திருந்ததாக கூறப்படும் நிலையில்,

கலஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உறவின வீட்டிற்கு சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரத்தின் பிரதான மின் விளக்குகளில் ஒன்று செயலிழந்துள்ள நிலையில், ஒற்றை விளக்குடன் உழவு இயந்திரம் பயணித்துள்ளது. இந்நிலையில் எதிரே வருவது மோட்டார் சைக்கிள் என நினைத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பயணித்ததாலேயே விபத்து நேர்ந்ததாகவும், மின்வெட்டால் வீதி விளக்குகளும் எரியாததால்,

எதிரே வந்த உழவு இயந்திரத்தை அவர்களால் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து பயணித்த யுவதி, தூக்கி வீசப்பட்டு, உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இளைஞனும் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

சடலங்கள் கந்த வீதியில் உள்ள இளைஞனின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. இந்நிலையில் குறித்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.