சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு மருத்துவர் செய்து வந்த மோசமான செயல் : விசாரணையில் பேரதிர்ச்சி!!

483

அமெரிக்கா…

சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் ஒருவர் தனது விந்துவைச் செலுத்தி கருவுறச் செய்த சம்பவம், குறித்த மருத்துவரின் விந்தணுவால் பிறந்த இளம்பெண் கொடுத்த புகாரால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க்கில் ரோசெஸ்டரில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன்.

கடந்த 1980ஆம் ஆண்டு இவரை தேடி கருவுறுதல் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், உள்ளூர் மருத்துவ மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்படட விந்துவை செலுத்தி கருவுற செய்வதாக கூறியுள்ளார்.

குறித்த பெண்ணும் சம்மதம் தெரிவித்த நிலையில், மருத்துவர் மோரிஸ் அப்பெண்ணிற்கு தனது விந்துவையே செலுத்தியதோடு, குறித்த பெண்ணும் இது தெரியாமல் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அப்பொழுது பிறந்த குழந்தை தற்போது பெரியவராக வளர்ந்த நிலையில், அதே மருத்துவரிடம் மகளிர் மருத்துவ சிகிச்சைக்கு வந்த நிலையில், டிஎன்ஏவை பரிசோதனை செய்துள்ளார்.

இதில் தனது உடன்பிறப்புகள் ஒன்பது பேர் இருப்பதாக காட்டிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெண் தனது தாயாரிடம் விசாரித்துள்ளார். ஆனால் குறித்த குழந்தைக்கு தான் ஏற்கெனவே டோனர் பேபி என்பது தெரிந்துள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன் டிஎன்ஏ உடன் தனது டிஎன்ஏ ஒத்துப்போவதும் தெரிந்த நிலையில், அதிர்ச்சியடைந்த பெண் தனது தாயாருடன் சேர்ந்து மருத்துவர் மோரீஸ் மீது புகார் அளித்துள்ளனர்.

சிகிச்சை பெற வரும் பெண்களுக்கு பல மருத்துவர்கள் டோனர் விந்தணு என கூறி, தங்களது சொந்த விந்துவை செலுத்தி கருவுற வைக்கும் சம்பவங்கள் தொடர்பாக அதிகமாக புகார் வந்த நிலையில்,

இந்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்ததுடன், வேறொரு மருத்துவரான டொனால்ட் கிளீன் என்பவரும் இதுபோன்று 12 பெண்களை தனது விந்துவை பயன்படுத்தி கர்ப்பமடைய செய்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கில் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், அவரது மருத்துவ உரிமையை ஒரு வருடத்திற்கு ரத்து செய்ததுடன், அவர் ஓராண்டுவரை சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.